Saturday, May 21, 2011

எங்கே கரைந்து போனாய் அம்மா

உன் பார்வை படாத நானும்
அம்மா என வாய் நிறைய
அழைத்தாலும் பதில் பேசாத
புகைப்படத்தில் நீயும்,
அசையாத உருவத்தில் நின்ற
கடவுள்களிடம் எனக்காக ஓயாமல்
விளக்கேற்றி வழிபட்ட உனக்கு
விளக்கேற்றி வழிபட என் கண்ணீருக்கு
சம்மதமில்லையம்மா,
சின்ன நிகழ்வுகளையும் உன்னிடம்
பகிர்ந்த வழக்கத்தில்,என்ன நிகழ்ந்தாலும்
சொல்வதற்குமுன் நீ மறைந்துவிட்டதை
மறந்துபோய் வேதனயுற்றே,மனதில்
பதிதுந்துபோனது உன் மறைவு.
பந்தங்கள் பல இருந்தும்
நாம் இருவர் மட்டுமே
வாழ்வதாய்  எண்ணினேன்.
இப்போது உலகில் தனித்து
வாழ்வதாய் உணருகிறேன்.
நீயிருக்கிறாயென வைத்திருந்த
உன் ஸ்பரிசம்பட்ட பொருள்களில்
செல்பேசியும் களவாடப்பட்டதே,
அதை வைத்திருக்கவும் எனக்கு
அருகதையில்லையாம்மா,
வயதான அம்மாவை கைப்பிடித்து
அழைத்துச் செல்லுபவரை வழிப்போக்கில்
பார்த்துபோது இப்படியான வாய்ப்பை எனக்கு
கொடுக்காமல் போய்விட்டாயேனு கலங்குகினேன்,
பக்கத்து குழந்தை சாப்பிடுவதை பசியுடன்
பார்க்கும் குழந்தை போல் பார்க்கிறேன்
அம்மாவுடன் வாழ்பவர்களை.
உனக்கு சாந்தி என் மகிழ்ச்சிதான்
என்றாலும் எதற்காகவாது சிரித்து
மகிழும்போது அந்த சாப்பிடும்
குழந்தையாய் நானும் புகைப்படத்திலிருந்து
நீ வேடிக்கை பார்ப்பது போன்றும்
உணருகிறேன்.உன் பாச அருவியில்
நனைந்தில் இன்று எனக்கு வந்த நிலை,
நாளை உன் பேத்திக்கு வேண்டாமென்று
குழந்தையிடம் அன்பில்
சிக்கனமாக இருக்கின்றேன்.
நான் வருவது தெரிந்தால்
மகிழ்ச்சியில் உறங்காமல்
என்னை பார்க்கும் தினமும்
நிமிடமும் இப்போதே
வந்துவிடாதாயென
ஏங்கிக்கொண்டிருப்பாயே,
இந்த வழியாக இந்த வாசலுக்குதான்
வருவாள்,வந்துவிடுவாள் பார்ப்பதை
நிறுத்துயென கண்கள் காலில் விழுந்து
கேட்காத குறையாக கேட்டும்
வாசலிலே காத்திருந்து பூரித்த
முகத்துடன் என்னை வரவேற்த்து
உபசரிப்பாயே,இப்போது
அதே வழி வாசலுக்கு உன்
நினைவுகளை சுமந்து வருகிறேன்
பல முதல்கள் செய்த உனக்கு
முதல் வருட திதி கொடுக்க….








4 comments:

  1. நினைவுகளை சுமந்து வருகிறேன்
    பல முதல்கள் செய்த உனக்கு
    முதல் வருட திதி கொடுக்க//
    மனம் கனக்கிறது. முதல் உறவான தாய்க்கு இறுதிச் ச்டங்கு!
    அம்மா என்றாலே அன்பு..

    ReplyDelete
  2. அம்மா என்றாலே அனைவருக்கும் மகிழ்ச்சி ஏற்படுகிறது.

    உங்களின் தாய்ப்பாசம் என்னை நெகிழச்செய்கிறது.

    என் அம்மா வாழ்ந்த [1910-1997] 87 வருடங்களில், கடைசியாகப் பிறந்த குழந்தையாகிய எனக்கு, அவர்களின் கடைசி 47 வருடங்கள் மட்டுமே அவர்களுடன் சேர்ந்து வாழ முடிந்தது.

    இன்று அவர்களை நினைத்தாலும் அவர்கள் பிரிவு தாங்கமுடியாத, ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகவே உணரமுடிகிறது.

    காலம் தான் நம் கவலையைக் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கச்செய்து, மனதை சமாதானப்படுத்த முடியும். மனதை திடமாக வைத்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  3. அம்மாவை இழந்த யாருக்குமே ஆறுதல் கூற யாராலும் முடியாது

    ReplyDelete
  4. அம்மாவை இழந்த யாருக்குமே ஆறுதல் கூற யாராலும் முடியாது

    ReplyDelete