அம்மா !
என்னக்காகவே வாழ்ந்து ,
கடைசி சுவாசத்தையும்,
என் கையிலேயே,
விட்டுச் சென்ற உனக்கு
என்ன செய்து ஈடு
செய்வேன்!
என் இயலாமையில்
நொந்து போகிறேன்
எந்த சக்தி
உன்னை வரமாய்
தந்ததோ ,இத்தனை
விரைவில் பிரியவும்
சாபமளித்துவிட்டது ........
உலகில் வற்றாதது !
எல்லை இல்லாதது!
விலையற்றது
எதிர்பார்ப்பற்றது!
இணைஇல்லாதது!
பரிசுத்தமானது!
மதிப்பிட முடியாதாது!
அம்மாவின்
அன்பு !!!
தாயின் கனிவை பற்றி அனைவரும் அறிந்திருந்தாலும்,அனைத்து அன்னையர்களும் சிறந்தவர்கலேன்றாலும்,அம்மாவிற்காக எதுவும் செய்யவில்லையென வருந்திய எனக்கு ஆறுதலாய் இந்த பக்கங்களை எழுதத் தூண்டியது
எனக்குள் உள்ள அம்மா பாசம் மட்டும் அல்ல ,ஏக்கம் .... ஆம்
.என் அம்மாவின் இயற்கை மறைவுதான் காரணம்,சொற்ப ஆயுள் எனக்கு கிடைத்த தாய் பாசத்திற்கும்,அம்மாவிற்கும்தான்!!
29 வது வயதில் என் அம்மாவை இழந்துவிட்டு பரிதவிக்கும் நான்
என் அம்மாவைப் பற்றியும் ,அம்மாவுடன் வாழும் ஆசி பெற்றோர்களுக்கு
மேலும் கவனம் செலுத்துங்கள் பெற்றோர்கள் மீது என்று கூறவும் , கனத்த மனதுடன் தொடங்குகிறேன் ......டைரி எழுதினால் என்றாவது அழிந்துவிடுமே என்ற சந்தேகம் இல்லாமலும் நமக்கு அளிக்கப்பட்டுள்ள மணித்துளி & மனித உறவுகளை ரசித்து வாழ்க்கையய் மேற்கொள்ளுங்கள் என்று சொல்ல ஆசைப்பட்டும் தொடங்குகிறேன்
கோவில் நகரம் மதுரை மாவட்டத்தில் அழகான தனிட்சியம் என்ற கிராமத்தில் பிறந்து ,அந்த மண்ணிற்கே உரிய பாவனையும் ,பேட்சும் கொண்டவர் என் அம்மா.
என் அன்பு அம்மாவின் பெயர் ராஜாமணி .
அம்மாவின் பெயரை டைப் செய்தவுடன் அந்த எழுத்துக்களில் அம்மாவை நேரில் பார்ப்பது போல உணர்ந்ததால் சில நிமிடம் மனதார அழுதுவிட்டு மீண்டும் டைப் செய்கிறேன்.
மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்த என் அம்மா பிறகு சென்றது வயல் வேலைக்குத்தான்."ஆண் பிள்ளை போல வேலை பார்க்கிறா ", "நல்ல உழைப்பாளி"
என்று பெயர் வாங்கினாலும் அது எவ்வளவு கஷ்டம்னு யாருக்கு புரியும்,என் தாத்தா ஆண் பிள்ளைக்கு ஈடாக விவசாயம் கற்று கொடுத்து வேலை வாங்குவாராம் .என் அம்மாட்சி தாத்தாவை இன்றும் கூப்பிடுவது " ராசமனியப்பா" என்றுதான் . என் தாத்தா அம்மாட்சிக்கு அம்மாவின் பிறந்த தேதி கூட நினைவில்லை , இது எனக்கு பெரிய வருத்தம்,இன்றும் என் தாத்தா, அம்மாட்சி ,அம்மாவின் எல்லா சடங்குகளையும் (சங்கடங்களையும் ) முடித்துவிட்டு இருக்கிறரர்கள் .
தோரயமாக என் அம்மாவுக்கு 21 வயதில் பல மாப்பிள்ளை தேடும் படலங்களுக்கு பிறகு ஏற்பாடு நடந்து பெரியோர்களின் ஆசியோடு அதே மதுரை மீனாட்ச்சி அம்மன் கோவிலில் 09/07/1978 ல் திருமணம் நடந்தள்ளது என் அன்பு அப்பாவுடன் .