பக்கத்து வீட்டிற்கு சென்றாலும்
விளையாடப் போனாலும்
பள்ளிக்கு சென்றபோதும்
தோழிகளுடன் சென்றபோதும்
கல்லூரிக்கு சென்றபோதும்
அம்மா போயிட்டு வரேன்னு
சொல்லிட்டு போவேன்,
அவசரமாய் பஸ்ஸை பிடிக்கச் சென்ற
ஓரிரு முறை போயிட்டு வரேம்மான்னு
சொல்லாமல் போனதில் மாலை
வீடு திரும்பி உன் முகத்தை
பார்க்கும்வரை மனம் உறுத்திய
வலியை உன்னிடம் பகிர்ந்ததில்லை.
திருமணமாகி புகுந்த வீடு செல்லுகையில்
போயிட்டு வரேன் என்ற வார்த்தையின்
கொடூரம் உணர்ந்தேன்.
அதன்பிறகு ஒவ்வொரு முறையும்
கணவருடன் வந்து செல்லுகையில்
வாசற்படி எங்கிருக்குன்னு தெரியாமல்
மறைக்கும் கண்ணீரை தொடைத்து,
அடைத்த தொண்டைக் குழியில்
போயிட்டு வரேம்மா என்பதும்
மூழ்கி மூழ்கித் திணறும்.
கண்ணீரை
கட்டுக்குள் வைக்க இருவரும்
போராடுவோம் ..
இதனாலா உன் மரணப் படுக்கைக்கு
போயிட்டு வரேன்னு
சொல்லாமலே சென்றாய்.....
சொல்லாமலே சென்றாய்.....
உன் மனம்
எவ்வளவு
வேதனைப்பட்டிருக்கும்......
எவ்வளவு
வேதனைப்பட்டிருக்கும்......
அம்மாவின் நினைவலைகளை அழகான கவிதையாகப் புனைந்து கொடுத்திருக்கிறீர்கள். எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் அம்மாவை யாராலும், குறிப்பாகப் பெண்களால் மறக்கவே முடியாது தான். அம்மா அம்மா தான், மீதி உறவெல்லாம் சும்மா தான்.
ReplyDelete>>>>>
//திருமணமாகி புகுந்த வீடு செல்லுகையில்
ReplyDeleteபோயிட்டு வரேன் என்ற வார்த்தையின்
கொடூரம் உணர்ந்தேன்.
//
சபாஷ்! ஆமாம் இந்த இடத்தில் தான் பெண்களுக்கு ஒருபுறம் சந்தோஷம் இருப்பினும், ஒருபுறம் தன் தாயைப்பிரிகிறோமோ என துக்கம் அதிகமாகவே இருக்கும்.
புதிய இடத்தில் நாம் எப்படி நடத்தப்படுவொமோ என்ற அச்சம் வரும்.
எதையும் பகிர்ந்து கொள்ள தன் தாய் அருகில் இருக்க மாட்டாளே என்ற சோகமும் சேரும்.
>>>>>>
//
ReplyDeleteஅதன்பிறகு ஒவ்வொரு முறையும்
கணவருடன் வந்து செல்லுகையில்
வாசற்படி எங்கிருக்குன்னு தெரியாமல்
மறைக்கும் கண்ணீரை தொடைத்து,
அடைத்த தொண்டைக் குழியில்
போயிட்டு வரேம்மா என்பதும்
மூழ்கி மூழ்கித் திணறும்.
கண்ணீரை
கட்டுக்குள் வைக்க இருவரும்
போராடுவோம் ..//
உணர்வுகளை எழுத்தினில் ரொம்ப நல்லா கொண்டுவறீங்கோ! மகிழ்ச்சியாக உள்ளது.
பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
எல்லாருடைய நினைவுகளும் இப்படித்தான் இருக்கும்!
ReplyDelete