Monday, January 3, 2011

மறைந்த அம்மாவிற்கு

எனக்கு பிடித்ததை மட்டுமே
செய்து ஒவ்வொன்றும்
பார்த்து பார்த்து வாங்கிக்
கொடுத்த பொருள்களுடன்
ஞாபகமாய் நீ உபயோகித்த
        பொருள்களையும் வைத்துருக்கிறேன்,
நீ இடுகாட்டுக்கு போனவுடன் 
அழுதால் சாந்தி பெறமாட்டாயென
சிலர் சொன்னதால் அன்று இரவு
வரை சேமித்த கண்ணீர்
இப்போதும் கசிகிறது !
 மறைந்த உனக்கு,படைப்பதற்காக
       வைக்கப்பட்ட பொருள்களுடன்,அம்மாவிற்கு
      பிடித்த பதார்த்தமும் வைக்க சொன்னபோது 
       உனக்கு என்ன பிடிக்கும்னுகூட  தெரியாமல்
வளர்ந்ததை நினைத்து வெக்கிய என்னை 
உனக்கு பிடித்த நானிருக்க வேறென்ன 
பிடிக்கப்போகிதுறன்னு  பொருமிய மனதுடன்
அப்பாவிடம் சென்று விசாரித்தேன்.
வீட்டாருக்கும்,உறவினருக்கும்
எத்தனை இனிப்புகளும்,காரங்களும்
விருந்துகளும் அலுக்காமல்
செய்த உனக்காம்மா 
படையல்!
என்னால் தாங்க முடியலம்மா! 
 வாழ்ந்த போது கனவில் வந்தால்
மறந்து போன நான்,மறைந்த பிறகு 
என் கனவில் வரும் உன்னை
யோசித்து,யோசித்து ஞாபக அறையில்
சேமிக்கிறேன். வரப்போகும்
நாள்களுக்கெல்லாம் ஒரு அர்த்தமிருக்கலாம்
வருடத்தில் ஒரு முறை வரப்போகும்
என்னை நீ பிரசவித்த நாளுக்கு
என்ன அர்த்தமம்மா?இனி
அந்த நாள் எனக்கு என்ன நாளம்மா?
அந்த நாளில் என்ன செய்வேனம்மா?
மனிதர்களே!உங்கள் பிறந்த நாளை
உங்களுக்காக கொண்டாடுவதை
தவிர்த்து பெற்றோருக்காக
கொண்டாடுங்கள்!!
உனக்கு பிடித்த நிறத்திலே
எழுத்துக்களை பதிந்ததை விட
என்னால் ஒன்றும் செய்ய முடியாமல்
போய்விட்டதேம்மா?
அவ்வப்போது ம்மா,ம்மா என்று
அழைக்கிறேன் உன்
பேத்தியை...

14 comments:

Unknown said...

அன்புள்ள சகோதரி, எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை, உங்களின் இதே மனநிலையில் ஆறு மாதத்திற்கு முன்பு தாயை பரிகொடுத்தவன் நான், உங்களின் வலியும், வேதனையும் எனக்கும் இருக்கிறது, என்னுடைய தாய் இறந்துவிட்டதை நான் மறக்க நினைக்கிறேன், என்னுடைதான் அவர் வாழ்கிறார் என்று முழுமனதுடன் நம்புகிறேன், நீங்களும் நம்புங்கள், மறைந்த உங்கள் தாயாரின் அருளும் ஆசியும் உங்களுக்கு எபோதும் இருக்கும், கண்ணீருடன், சுரேஷ் - இரவுவானம்

ஆச்சி ஸ்ரீதர் said...

மருந்தில்லா வலி.என் துக்கத்தை பகிர்ந்து ஆறுதல் அளித்தமைக்கு நன்றிங்க

Porkodi (பொற்கொடி) said...

எல்.கே அறிமுகப் படுத்தியதன் மூலம் இங்க வந்தேன்.. நேத்து இரவே எல்லா பதிவையும் படிச்சுட்டேன், ஆனா அப்ப‌ பின்னூட்டம் இடற அளவு மனதில் அமைதி இல்லை. மணியோட பாசம் படிக்க ரொம்ப இதமாக இருந்தது.. அம்மாவுக்கே உரிய பாசம்ல அது? நான் ஒரே குழந்தை என்னோட பெற்றோருக்கு.. அதனால படிக்கும் போது எல்லாம் ஏதேதோ நினைவுகள்.

நல்லா எழுதறீங்க, அம்மாவோட நினைவுகள் எவ்வளவு முக்கியமோ அதே போல நீங்க சந்தோஷமா இருப்பதும் முக்கியம். அதானே உங்கம்மாவுக்கு சந்தோஷம்? பொண்ணு, மாப்பிள்ளை, பேத்தி எல்லாம் சந்தோஷமா பாத்துருக்காங்க, இனிமே உங்களை பத்தி, வாழ்க்கையை பத்தி, நீங்க வாழற இடம் பத்தி, குட்டியின் சேட்டைகள் பத்தின்னு எழுதி கலகலப்பா இருக்கணும்! தொடர்ந்து எழுதுங்க!

சம்பந்தம் இல்லாம ஒரு சின்ன டவுட்டு நீங்க ஒரே பொண்ணுன்னு முதல் (அல்லது ரெண்டாவது) பதிவுல சொன்ன மாதிரி இருந்தது அப்புறம் தம்பி தங்கை எங்க இருந்து வந்தாங்க?!

Angel said...

I CRIED A LOT.2 YRS BACK I LOST MY BELOVED DAD.
I BOOKED THE FLIGHT TICKETS WE WERE WAITING TO TRAVEL ON A SUNDAY BUT ON FRIDAY HE PASSED AWAY .
INNUM EN MANADHIL ANDHA VALI IRUKKIRADHU.
I SUFFERED A LOT WITH DEPRESSION .NOW GETTING BETTER.I DONT HAVE ANY BLOGS BUT I VISIT ALL THE BLOGS IN TAMILISH .KARTHICK INTRODUCED YOU IN VALAICHARAM.THATS HOW I CAME TO KNOW ABOUT YOU .
NEENGAL INNUM NIRAIYA EZHDHA VENDUM,SANDHOSHAMAAGA EZHUDHA VENDUM .BE HAPPY.

ஜெய்லானி said...

:-(

ஆச்சி ஸ்ரீதர் said...

பொற்கொடி அவர்களுக்கு
வருகை தந்தமைக்கு நன்றி.தங்கள் கருத்துக்களை ஏற்கிறேன்.தங்கள் சந்தேகத்திற்கு விடை "திருமணத்திற்கு பிறகு அம்மா "என்ற இடுகையில் கிடைக்கும்.அம்மாவிற்கான பதிவை தவிர மற்றொரு வலைப்பதிவும் துவங்கியிருக்கிறேன்.

ஆச்சி ஸ்ரீதர் said...

welcome angelin;

i realy upset about ur situvation in urs dad's last ceremony.we can't get best life without our parent support&their guiding.but we become a helpless pepole to parent in some poor situvation.the creation of my blog is not only share my sad,pepole should care their parent {(mainly married pepole)&their every relations}much more.because parent care their children than teirself.




& welcome jailani

ஆனந்தி.. said...

//.we can't get best life without our parent support&their guiding.but we become a helpless pepole to parent in some poor situvation.the creation of my blog is not only share my sad,pepole should care their parent {(mainly married pepole)&their every relations}much more.because parent care their children than teirself.//

Ofcourse aachi..It is very true and truth also...we have to care our parents though we are the position of parent..It is the graceful boon in our life..!! thanks to sharing that how much you love & care of ur parent (especially ur mom).i could be feel ur divine of love and affection with your mom...take care aachi...god bless you..

ஆச்சி ஸ்ரீதர் said...

thank u anandhi.

Unknown said...

//மறைந்த பிறகு
என் கனவில் வரும் உன்னை
யோசித்து,யோசித்து ஞாபக அறையில்
சேமிக்கிறேன்.//

Unknown said...

உங்க அம்மாவை போலத்தான் எல்லா அம்மா-க்களும் மிக பாசத்தோடு, ஆனால் உங்களைப்போல எந்த மகளும் இருப்பார்களா என்பது சந்தேகமே. உங்கள் தாய் பாசத்திற்கு சல்யூட்.

குறையொன்றுமில்லை. said...

உங்களைப்போல பாசமிகுந்தமகளைப்பெற்ற உங்க அம்மா ரொம்பவே கொடுத்துவச்சவங்க.

மாலதி said...

//மறைந்த பிறகு
என் கனவில் வரும் உன்னை
யோசித்து,யோசித்து ஞாபக அறையில்
சேமிக்கிறேன்.// உங்க அம்மா ரொம்பவே கொடுத்துவச்சவங்க.

ஆச்சி ஸ்ரீதர் said...

வாங்க..பாரத் பாரதி,லெஷ்மிம்மா,மாலதி

எங்கம்மா கொடுத்துவச்சவங்க இல்ல,அப்படியிருந்திருந்தா என் அம்மா இன்னும் கொஞ்சநாள் இருந்திருப்பாங்களேனு தோனுது.

வருகை தந்து இப்படியான கருத்துக்களை/ஆறுதலை பரிச்சியம் இல்லாதோர் சொல்லும்போது
எங்கம்மா இறந்தும் உங்களைப் போன்றோரின் வழியாக ஆறுதல் சொல்லுவதாகவே உணருகிறேன்.

Post a Comment