எட்டாம் நாள் (ஜூன் /28 /2010) பொழுது விடிந்தது,நைட் டுட்டியிளிருந்த டாக்டர் வந்தார்,காலை டூட்டிக்கு வரும் டாக்டர் பாத்துக் கொள்வாறேன்றார்.வெறும் ஆக்சிஜன் வச்சுருக்கிங்க,வேற எதுவும் ட்ரீட்மன்ட் எப்ப தொடங்குவீங்கனு கேட்ட போது அவருக்கு கோபம் வந்தது,அவங்க உடம்பு தாங்கும் நிலை வந்தால்தான் எதுவும் செய்ய முடியும்.எங்களுக்கு தெரியும் எப்ப என்ன செயயனும்னு சொன்னார்.இரவு வைத்த சலின் கால் பாட்டில் கூட குறையல,நர்சிடம் ஏன் இவ்ளோ ஸ்லோவா வச்சுருக்கீங்கனு கேட்டால் டாக்டர் சொல்வதைத்தான் நாங்க செய்ய முடியும்னு பதில் வந்தது.எங்களால் என்ன செய்ய முடியும்,உடல் நிலை மோசமான அம்மாவை மருத்துவ மனையில் ஒப்படைத்து விட்டோம்,எங்களால் பணத்திற்கான ஏற்பாடும்,வேடிக்கயும்தான் பாக்க முடிந்தது.அம்மா பூனம் புடவைதான் உடுத்தியிருந்தாங்க .காலையில் இரு ஆண்கள் (வார்ட் பாய்)வந்து பெட்சீட் மாத்த வந்தாங்க,அப்போ அம்மா ஆச்சி என் புடவையை காலில் நல்லா இழுத்துவிடு,வயிற்ரை மூடிவிடுன்னு சொன்ன போது கொடுமையாக இருந்தது.அந்த வார்ட் பாய் நைட்டி போட்டுகங்கம்மா,நாளைக்கு காலையில் நாங்கதான் சுத்த படுத்த வருவோம்,முதுகில் பவுடர் பூசனும்,படுத்தே இருப்பதால் கஷ்டமாயிருக்கும்,கவலைப்படாதிங்க சரியாகிடுவீங்கன்னாங்க,இன்னொருவர் பயப்டாதிங்கம்மன்னார். உள்ளே வந்த அப்பாவிடம் நைட்டி போட சொல்றாங்கன்னேன்,கடை திறந்தவுடன் வாங்கலாம்னார்,(இது வரை நைட்டி அணிந்து பழக்கமில்லாத அம்மா)எனக்கு வேண்டவே வேண்டாம் போகாதிங்கன்னாங்க,நான் போய் வாங்கிட்டு வரேன்னேன்,வேண்டாம் நான் போட மாட்டேன் நீங்க ரெண்டு பெரும் இங்கயே இருங்கன்னாங்க.அப்பாவிற்கு அக்கவுன்ட் செக்சனிளிருந்து அழைப்பு வந்தது.
நான் என் பர்சிலிருந்த வைரவர் அஷ்டகம்,துர்க்கை அஷ்டகம் எடுத்து படிக்க முயற்சித்தேன்,அந்நாள் முழு மனதாக படிக்க முடியல.வைபறேசனில் வைத்திருந்த போனும்,வந்து வந்து போகும் நர்ஸ்களின் மேலும்தான் மனம் சென்றது. அப்பத்தான் ஒன்றை உணர்ந்து வருந்தினேன்.என்னை அம்மா எப்படிலாம் பாத்து பாத்து வளர்த்தாங்க,என் திருமணத்திற்காக எவ்ளோ மனக் கஷ்டம் பட்டு என்னை திருமணம் செய்து கொடுத்தாங்க.எனக்கு நல்லா வாழ்க்கை அமைந்தும் என் கணவருக்காகவும் குழந்தைக்காகவும் ஒவ்வொன்றும் பாத்து பாத்து செய்துருக்கிறேன் அது போல ஒன்று கூட நான் அம்மாவிற்காக செய்யவில்லைனு யோசித்தேன் அம்மாவும் வீட்டு வேலைகளும்,மனக் கவலைகளும்,என் நினைவுகளுடனிருந்து தன் உடலை நிலையை அலச்சியப்படுத்திட்டாங்க, நானும் கவனிக்கல,அது மாதிரியான சந்தர்ப்பங்களும் அம்மா எனக்கு வைக்கல,என்னாலதான் அம்மா இப்படி ஆகிட்டாங்கனு நொந்து கொண்டேன்.தம்பி பாக்க வந்திருந்தான்,அவன் எதுவும் பேசல,அப்பா முப்பதாயிரம் பணம் கட்டிவிட்டு மேற்படி செலவிற்கு தம்பியிடம் பணம் எடுத்து வர சொன்னார்.மீண்டும் நாகை சென்றான்.அப்பா எனக்கு சாப்பாடு வாங்கி வந்து கொடுத்தார்,(முதல் நாள் மதியம் சாப்பிட்டது,பசி என்ற உணர்வே இல்லை).வேணாம்னு மறுத்த என்னை அந்த நிலையிலும் அம்மா சாப்பிடும்மா ,போம்மான்னாங்க கண்ணீர் பீறீக் கொண்டுதான் வந்தது.(இதை டைப் செய்யும்போதும் அதே மாதிரி என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை) அம்மா சொன்னதற்காக கண்ணீருடன் கலந்து உண்டேன்.அம்மாவிற்கு பால் கொடுத்து மாத்திரைகளை கொடுக்க சொன்னார்கள்.கொடுக்கும்போது மாஸ்க்கை கழற்றி விட்டு கொடுக்கப்படும்போது ரீடிங் குறைந்துகொண்டே போக எனக்கு கை காலெல்லாம் நடுங்க ஆரமித்துவிட்டது .அவசரமாக கொடுத்துவிட்டு மாஸ்க்கை போட்டு விட்டேன் .ரீடிங் நார்மலானது.ஆனால் அம்மா மாஸ்க்கின் வழியாக சுவாசித்தாலும் சாதரணமாகத்தான் படுத்திருந்தாங்க .எங்களுடன் நல்லா பேசினாங்க ,அந்த மெசின் சவுண்டும்,பீப் பீப் சவுண்டும் என் காதில் இன்னமும் ஒலித்துக் கொண்டுதானிருக்கு.
காலை டூட்டி பாக்கும் டாக்டர் வந்தார் நான் என்ன சொன்னதற்கும் கேட்டதற்கும் எந்த பதிலும் அவரிடமிருந்து பெற முடியவில்லை,ஏழாயிரத்து சொச்சத்துக்கு மருந்து எழுதிக் கொடுத்தார்,நாகையில் எடுத்த ஸ்கேன் ரிப்போட்டை எடுத்துகிட்டு போய் பக்கத்து மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் பரீசீளிப்பு மருத்துவரிடம் ரிப்போர்ட் வாங்கிட்டு வர சொன்னார்.(இவ்வளவு பெரிய மருத்துவ மனையில் ஏன் அது இல்லைன்னு தெரியல ).மளிகை சாமான் போல அப்பா மருந்து பை நிறைய வாங்கி வந்தார்.(பாதியை நர்ஸ் செக்கிங் செய்துட்டு தருவோம்னு எடுத்து போனவர் திரும்ப அந்த மருந்துகள் வந்து சேர வில்லை). மீதி மருந்துகள் சலின் பாட்டில் வழியாகவும்,ஊசி மூலமும் செலுத்தப் பட்டன.ஒரு நர்சிடம் விசாரித்தேன்,இவ்ளோ மருந்தும் ஒரே நேரத்தில் போடுகிறேர்களே அம்மா உடம்புக்கு எதுவும் தொந்தரவு வந்துடாதுல்லன்னு கேட்டவுடன் அவர் இன்னும் நீங்க ரெண்டு செட் வாங்கனும் அதையும்தான் போடனும்.ஒரு செட் போட்டதற்கே இப்படி கேக்ரிங்கன்னாங்க.icu ரெண்ட் ஒரு பக்கமிருக்கட்டும்,ஒரு நாளைக்கு இருபத்திறேண்டாயிரத்துக்கு மருந்து வாங்குவது ஒரு பக்கமிருந்தாலும்,மருந்து போட்டே அம்மாவை கொன்னுடுவான்கப்பா நாம போய் டாக்டர்ட கேப்போம்ப்பா
என்றேன் .அப்பா ஒத்துக்கல.என் தோழியிடமும் போனில் விபரம் சொல்லி கேட்டுவிட்டு அப்பாவை அழைத்துக்கொண்டு டாக்டரை பாத்தோம்.என்ன செயயனும்னு எங்களுக்கு தெரியும்னார்,இந்த மருந்துகளை நேற்று இரவிலிருந்து காலை பத்துமணி வரை போடாமல் ஏன் டிலே செயதீங்கன்னேன்(அவருக்கு கோபம் வராமல் வேறென்ன வரும்) .எங்களால் அதிக பணம் கட்டுவதும் சிரமமேன்றேன்,வெளியில் வந்த அப்பா ஏம்மா நீ வேற ஒன்னுகடக்க ஒன்னு சொல்லி வேதன படுத்தற நகைலாம் எதுக்கு இருக்கு.பாத்துக்க்கலாம்மான்னாங்க.
அம்மாவிடம் வந்தவுடன் எங்கம்மா விட்டுட்டு போனன்னாங்க.போன் பேசிட்டு வந்தேன்னு சொன்னேன்.அப்பா அந்த பக்கத்து மருத்துவமனைக்கு போயிட்டு அந்த மருத்துவர் மதியம் மூன்று மணிக்குதான் வருவாராமேன்ர சோக பதிலுடன் வந்தார்.ஒரு வேலை வர வேண்டிய ரிப்போர்ட்டில் வேற ட்ரீட்மன்ட் கொடுக்கனும்னா அவர் நாளைக்கு வந்தார்ன்னா அதுவரை என் அம்மாவின் நிலை என்னாவது,மதியம் மூனு மணி வரை என் அம்மாவிற்கு நேரம் வேஸ்ட்தானே,எங்க ஊரில் வசதி இல்லைனுதானே இவ்ளோ தூரம் வந்தோம்,இங்க பாக்க முடியாது அழைச்சுட்டு போயடுங்கன்னு சொன்னாலாவது வேறெங்க முடியுமோ அங்கு போகலாமே,எங்களை வசதியாக வாழ வைத்த உருகி உருகி கவனித்த அம்மாவை இப்படி கவனிக்காமல் விட்டுட்டோமேனு வருந்தினேன்.
அம்மாவிற்கு பால் தவிர எதுவும் கொடுக்க முடியாமலிருக்கொமேனு நர்சிகளிடம் கேட்டேன்,கஞ்சி அல்லது காரமில்லாத சூப் கொடுக்கலாம்னாங்க.
அப்பா எங்களுக்கு மதிய சாப்பாடு வாங்கிட்டு விசாரித்துட்டு வந்தார்.பிறகு அப்பாவிடம் அம்மாவை பாத்துக்க சொல்லிட்டு நான் வெளியில் போனேன். இரவோடு இரவாக மருத்துவமனைக்கு வந்த நான் அப்பத்தான் தஞ்சாவூர் மண்ணையே மிதித்தேன் ஒன்றரை மணி இருக்கும். எதிரே ஒரு சூப்பர் மார்கெட், ஷாப்பிங் காம்ப்லக்ஸ்னு இருந்தது, அங்கு சென்ற நான் ஒரு ஐஸ் க்ரீம் கடையை பாத்தவுடன் அங்கே வாசலில் ஓரமாக உக்காந்து ஆத்திரம் தீர அழுதேன், எத்தனை நாள் என் அம்மா வாங்கித் தந்து எங்களை சாப்பிட வச்சு சந்ததோஷப்பட்டங்க.இப்போ அந்த அம்மாவிற்கு என்ன வாங்க வந்துருக்கேன்,எங்கம்மா அப்படி என்ன பாவம் செய்துட்டாங்கனு அழுத என்னை அங்கு வந்தவரும்,போனவரும்,சுற்றியுள்ளவரும் வித்தியாசமாக வேடிக்கை பாத்தனர்,என் மாமா ஒருவருக்கு போன் செய்து விபரம் சொன்னேன்,அழுதேன்,எலோரும் சொல்வது கவலைப்படாத,மனதை தேத்திக்க,கடவுள் மேல பாரத்த போடு,என்ன நடக்கனுமோ அதான் நடக்கும்.எனக்கு என் கையாலாகாத தனத்த நினைத்து எதோ நடமாடிக் கொண்டிருந்தேன்.
ஒரு ஹோட்டலில் விசாரித்து விஜடபில் சூப் வாங்கிவிட்டு அருகிலுள்ள ஷாப்பிங் காம்ப்லக்ஸ்னுல் டிஷு பேப்பர் வாங்க போனேன்,அங்கு வாசலில் டோக்கன் கொடுத்து அம்மாவிற்காக வாங்கப்பட்ட சூப் வெளி கவுண்டரில் வைக்கப்பட வேண்டியிருந்ததை நினைத்து வேதனைப்பட்டேன்,இப்படியே போயடலாமனு பாத்தேன்,பிறகு டிஷு பேப்பர் தேவைப்படும்னு உள்நுழைந்து தேடி எடுத்து பில் பே பண்ணிட்டு காம்ப்லக்சிளிருந்து ரோட் க்ராஸ் செய்து மருத்துவமனைக்கு அம்மாவிடமும் வந்துவிட்டேன். அப்பா என்ன வாங்கிட்டு வந்திருக்கன்னு கேட்டவுடன்தான் ஞாபகமே வந்தது.இத்தனை நாள் என்னை தன் உயிராய் வளர்த்த அம்மாவிற்கு உணவு கொடுக்க கூட நமக்கு தகுதி இல்லையோனு நினைத்து இருங்கப்பானு சொல்லிட்டு என்னால் எவ்ளோ விரைவா போக முடியுமோ போய் என் கையிலிருந்த டோக்கனை கொடுத்துவிட்டு சூப் பார்சலை வாங்கிட்டு ஓடி வந்தேன்,காய்களை எடுத்துவிட்டு பாதி கொடுத்தேன்,போதுனுட்டாங்க. மாத்திரை கொடுத்தேன்,மேலுமொரு இடி என்னவென்றால் நான் போன பிறகு ஆக்சிஜன் காலியாகி விட்டாதால் அம்மாவிற்கு சிரமம் ஏற்பட,பிறகு மாற்றியிருக்கிறார்கள்.(அதற்கு பிறகு அந்த கருவி சரியாக இயங்குச்சானு தெரியல) அம்ம்ம நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க சாப்பிடுங்கன்னு கெஞ்சாத குறையா சொன்னாங்க,பிறகு பேருக்கு சாப்பிட்டு விட்டு முக்காவாசி சாப்பாட்டை குப்பத் தொட்டியில் போட்டோம்.
அப்பா மூனு மணிக்கு வருவதாக சொன்ன மருத்துவரை பாக்க பக்கத்து மருத்துவமனைக்கு ரெண்டேகாலிருக்கும் சென்றார்.அப்பாவின் நண்பர்,தம்பியின் நண்பர்கள், தாத்தா வந்தாங்க.தாத்தாவிடம் அம்மா (என் அம்மாச்சி)வல்லயான்னு கேட்டாங்க,இவ்ளோதூரம் எப்படிம்மா வருவாங்க வீட்டுக்கு போய் பாத்துக்கலாம்னேன்.சற்று நேரத்திலெல்லாம் ரீடிங் அறுபது எழுபதுக்கு போனது,எனக்கு பயமா இருந்தது,நான் மட்டும்தான் உடனிருந்தேன்,அம்மாகிட்ட பேசிப் பார்த்தேன்,நல்லா பேசுனாங்க,இரும்மா நர்சை அழைச்சிட்டு வரேன்னு சொல்லிட்டு போய் கூப்பிட்டவுடன் வந்தவர் டாக்டர்தான் இந்த மெசின ஆப்பிரெட் பன்வார்,அவர் வரட்டும்னு கூலாக சொல்லிவிட்டு தன்னுடன் வந்த மற்றொரு நர்சிடம் வீட்டுக் கதைகளை பேசிக் கொண்டு சலின் பாட்டிலை அட்ஜஸ்ட் செய்தார் .எனக்கு அவர்கள் மீது கடுப்புதான் வந்தது.டாக்டர கூப்பிட்டு வாங்கலேன்னேன்.நர்ஸ் வெளியே போனாங்க.நான் அப்பாவுக்கு போன் செய்தேன்.அந்த டாக்டர் இன்னும் வல்லம்மா,அம்மா எப்படி இருக்குன்னு விசாரித்தார்,பரவாயில்லை நீங்க முடிந்த வரை சீக்கிரம் வாங்கன்னு சொல்லி வைத்தேன்.இங்கு அம்மா உக்கரனுங்கராங்க ,பாத்து நிமிஷம் இருக்காது படுக்கனுங்கராங்க,மாத்தி மாத்தி சொல்றாங்க.பிறகு ரொம்ப நேரம் உக்காந்திருந்தாங்க,என்னிடம் தன் சேமிப்புகள் பற்றி சொன்னாங்க.அரை மணி நேரத்துக்குமேலா எந்த நர்ஸ் டாக்டர் யாரும் வரல,அம்மாவை விட்டுட்டு மீண்டும் அருகிலிருந்த நர்சை கூப்பிட்டேன்,வந்து பாத்திட்டு போனவர் ஒரு இளைங்கருடன் வந்தார்.அவர் டாக்டராம்.என் அம்மா காதுபடவே அவங்க லங்ஸ் மோசமாக்கிட்டுன்னவரை அம்மா பயந்துடுவாங்கலேனு அந்த பக்கம் வரேன் ப்ளீஸ் மெதுவா சொல்லுங்கன்னேன் ,அவர் எதையும் பொருட்படுத்தவில்லை.நீங்க எதுவும் எசபெக்ட் பன்னாதிங்கனு சொல்லிட்டு போய்ட்டார்.
அம்மாவுக்கு பயமோ என்னமோ இன்னமும் ரீடிங் குறைந்தது.நான் அழுதால் அம்மா வருத்தப் படுவாங்கனு கல்லாக இருந்தேன் என் தம்பியின் நண்பர்களிடம் விபரம் கூறி அப்பாவை நேராக போய் அழைத்து வர சொன்னேன்.அவர்களும் அப்படியே செய்து என் அப்பா வந்துவிட்டார் மணி ஐந்தாகியும் அப்பா எந்த மருத்துவரையும் பாக்க முடியலாம்.அப்பா வந்தவுடன் நான் வெளியில் போய் என் கணவரிடம் விபரம் சொல்லி அழுதேன்.அவரும் வ.இந்தியாவிலிருந்து புறப்பட தயாரானார்.ஐந்து மணிக்கு மேல் நாங்க பட்ட பாடு யாருக்கும் வரக் கூடாது,இங்கு டூட்டியில் உள்ள டாக்டர் வந்து கண்டிசன் மோசமாயிட்டு,இனிமே ட்யுப் மெத்தட் தான் அதுக்கு தனியா ஒரு நாளைக்கு பத்தாயிரம் கட்ட நீங்க ரெடின்ன நாங்க ட்ரீட்மென்ட் செய்ய தயாராகுறோம்னார்.என் அப்பா அப்பாவியாக அப்படி செய்தால் பிழைத்திடுவாங்கலான்னாங்க.இல்லை நம்ம திருப்திக்குதான்னு சொல்லிட்டு போய்ட்டார்.அம்மா எல்லாவற்றையும் நல்லா கேட்டாங்க,அப்பா டாக்டர் எல்லோரும் வெளியில் போயிட்டாங்க,அம்மா எவ்ளோ பயந்துருப்பாங்க,வேதனை பட்டிருப்பாங்க, அம்மாவிடம் அப்பாவை கூப்பிடவாம்மனு கேட்டதற்கு அவங்களுக்கு எங்கம்மா நேரமிருக்குன்னாங்க,என் கணவரும் உன்ன பாக்க வராரும்மன்னேன்,நீ ஏம்மா அவர தொந்தரவு பண்ற,சும்மாவே இருக்க மாட்டியான்னாங்க ,சற்று நேரத்தில் அம்மா மாஸ்க்கை கழற்றி விடுங்க,கழற்றி விடுங்கன்னு சொன்ன மாத்திரம் அதிகமாக வேர்த்துக் கொட்டியது,அப்போ அப்பாவும் உள்ளே வந்தார்,அம்மா குளுருது ஏசிய நிறுத்துங்கனு சத்தம்போட்டாங்க,நர்ஸ்களிடம் சொன்னால் டாக்டர் திட்டுவாங்க நிறுத்த மாட்டோம்னுட்டாங்க,அப்பா பக்கத்திலிருந்த ஏசியின் சுவிச்சை நிறுத்தினார்.அப்பா ஒன்னுமில்ல மணி பயப்படாத மணி னு குரலும் உடம்பும் நடுங்க,நடுங்க சொன்னார்,நர்ஸ் திட்டிகிட்டே சுவிச்சை போட்டு ரிமோட்டில் கண்ட்ரோல் செய்தார்,அப்பா என்னிடம் என்னம்மா செய்வோம்னு கேட்டாங்க,அந்த செலவையும் பண்ணிடுங்கப்பான்னேன்,அப்பா வெளியில் போய்ட்டாங்க,நர்ஸ் துணையுடன் உக்காந்திருந்த அம்மாவை விட்டுட்டு வெளியில் போய் அப்பாவை பார்த்தேன்,வீட்டுக்கு அழச்சுட்டு போயடுவோம்மா காசப்பத்தி இல்லம்மா அந்த கொடுமையெல்லாம் அம்மாவுக்கு வேணாம்மன்னாங்க ,எனக்கும் ஒன்னும் சொல்ல முடியல,உள்ளே வந்து உக்காந்திருந்த அம்மாவை கைத்தாங்கலாக பிடித்துக் கொண்டு நானும் உக்காந்திருந்தேன், போன் வைப்ரேட் ஆனவுடன் போகாத இங்கயே இருன்னு கை சாடை காமித்தாங்க,அம்மாவிற்கு மூக்கு சளி இழுப்பது போல கற் கரனு சத்தம் வந்தது.படுத்துக்கிறியாம்மான்னு கேட்டேன்,சரின்னு தலையாட்டினாங்க,படுத்தவங்களையும் என் கையிலே தலை வைத்தவாறு நானும் லேசாக பிடித்துக்கொண்டு அம்மா நீ என்னோட தாம்மா இருப்ப,நாமெல்லாம் சந்தோஷமா இருப்போம்மா,நாங்க சந்தோஷமா இருப்பத நீ பாக்குவம்மனு மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருந்தேன்.சற்று நேரம் கழித்து அம்மா கை கால்களை அசைத்தார்.எழுந்து அம்மா முகத்தை பாத்தா போது கண்கள் குழந்தை தூங்க போவது போல மயங்கி நின்றது.பக்கத்திலிருந்த நர்ஸ் கை விரலில் மாட்டியிருந்த நாபை எடுத்து கால் விரலில் மாட்டிவிட்டு அம்மாவின் கண்டகாலை பிடித்து பாத்தவர் நோ மோர்னு சொல்லிவிட்டார்.அம்மா என் கையிலே உயிர் விட்டது கூட தெரியாமல் வேடிக்கை பாத்த எனக்கு (தண்டனை முடிந்து விட்டதா,இன்னுமிருக்கானு தெரியல) ஒன்னுமே புரியல,எல்லாம் முடிந்து விட்டது என்னை நானே சுதாரித்துக் கொண்டு கதறினேன்,நர்ஸ் சத்தம் போடாதிங்கனு சொல்லிட்டு போய்ட்டார்,என்னை தன் உயிராய் கருதிய அம்மாவின் கண்களை நானே என் கைகளால் மூடிவிட்டேன் ,அம்மாவின் நெஞ்சில் மூச்சு வரும்மொன்னு அழுத்தி அழுத்தி பாத்தேன் லேசாக முதலுதவிக்கு அடிப்பது போல எல்லாம் முடிந்த பின் நப்பாசையில் செய்தேன்.உள்ளே வந்த தம்பியின் நண்பர் அப்பிடிலாம் செயாதிங்கக்கன்னு சொன்னார்,இநத வைத்துலதானம்மா பிறந்தேன்,என்னாலதாம்மா உனக்கு கஷ்டம்னு, அம்மா வயற்றில் படுத்து அழுதேன் (என் தோழி ஒருவரின் கால் வந்து கொண்டே இருந்தது) .வெளியில் நின்ற எல்லோரும் உள்ளே செய்தியறிந்து வந்தாங்க,வார்ட் பாயும் வந்தார்.அண்ணே எங்கம்மா நல்லாகிடுவாங்கன்னு சொன்னீங்களே எங்கம்மா எப்படி இருக்காங்கனு பாருங்கன்னேனு சொன்னவேகத்தில் அவர் கண்களிலிருந்தும் தண்ணீர் வந்தது, எல்லோரையும் வெளியில் போக சொன்னாங்க,எங்கம்மாவ போஸ்ட்மாடம் செய்வீங்கலானு கேட்டேன்,இல்லம்மா போம்மான்னு துரத்தினாங்க,அப்பா பொங்கி வெடித்தவராய் என்னை பிடித்து அலுத்து இழுத்துக் கொண்டு வாசலில் போய்தான் நிறுத்தினார்.யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது,எதுவாயிருந்தாலும் நல்ல டாக்டர பாருங்க,எங்கம்மா மீதி சூப்பை கூட குடிக்காம போயிட்டாங்களே,எங்கம்மாவுக்கு என்ன வியாதின்னு இதுவரை யாரும் சொல்லல்ல,இங்க வராதிங்கனு எனக்கு தோனுவதேல்லாம் சொல்லி கத்தினேன்,மருத்துவமனை வாசலில்.நாகையிலிருந்து தன் முயற்சியுடன் ஏறி வந்த அம்மாவை வந்த நேரம் கூட வல்ல,சடலமாக ச்ற்றக்சரில் வச்சு அம்புலன்சில் வச்சாங்க,நான் ஓடிப் போய் அம்மாவின் தலையை என் மடியில் வைத்துக் கொண்டேன்.என் தம்பி வைத்தியம் பாக்க எடுத்து வந்த பணத்திற்கு கூட வேலை இல்லாமல் போய்விட்டது.மீண்டும் நாகைக்கு என் அம்மாவை சடலமாக ஏற்றிப் போனதற்கு பிறகு நடந்த கொடுமைகள் வேண்டாம்.
http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_21.html
ReplyDeleteரொம்பவே மனவருத்தம் அடைஞ்சேன். சின்ன வயசில்(10) அம்மாவை இழந்த எனக்கு உங்க சோகம் புரியுது.
ReplyDeleteஇவ்வளவு நாளா உங்க பதிவைக் கவனிக்காமல் இருந்துட்டேன். இப்பவும் நம்ம எல்.கே. மூலமாகத்தான்...........
This comment has been removed by the author.
ReplyDeleteஎன் பதிவை கணடறிந்த எல்.கே அவர்களுக்கும்,அவர் மூலம் துளசி கோபால் அவர்களுக்கும் நன்றி.மேலும் மற்ற பதிவர்களின் பதிவுகளில் வருகை தந்திருந்தவர்கள் என் பதிவுக்கும் வருகை தந்திருப்பதில் மகிழ்ச்சி கலந்த நன்றி. மேலும் அம்மாவிற்காக இந்த பிளாக் எழுதியதில் மன பாரம் சற்று குறைந்தது போல தோன்றுகிறது
ReplyDeleteஎன்றுமே எப்போதுமே யாருக்குமே அம்மான்னா அம்மா தான். சுமந்து, பெற்று, வளர்த்து, ஆளாக்கி, நம் சுகத்துக்காக தான் பலவித கஷ்டங்கள் பட்டு அம்மம்மா...சொல்லிக் கொண்டே போகலாம். ஆஸ்பத்தரிகளில் டாக்ட்ர்கள் பணம் வசூலிக்கட்டும். பரவாயில்லை. எப்படியாவது புரட்டிக் கொடுக்கத்தான் போகிறோம். நோயாளிக்கும், உடன் இருப்பவர்களுக்கும் ஆறுதலாக, உண்மை நிலவரத்தை மிகவும் பக்குவமாகச் சொல்லி, எங்களால் முடிந்த அளவு என்ன செய்ய முடியுமோ அதெல்லாம் செய்து எப்படியும் பிழைக்க வைக்க முயற்சிக்கிறோம். பிறகு கடவுள் என்ன நினைக்கிறாரோ அதன் படி நடக்கட்டும், என்று நாலு நல்ல வார்த்தைகள் கூற வேண்டும். அத்தகைய அன்பான வார்த்தைகளிலேயே நோயாளிக்கு பாதி உடம்பு குணமானது போல ஒரு தெளிவும் நம்பிக்கையும் ஏற்படும். ஏனோ அது போல பெரும்பாலான மருத்துவ மனைகளில் மனிதாபிமானத்துடன், யாரும் நடந்து கொள்வதில்லை. [ எனக்குத் தெரிந்தவரை பெங்களூரிலுள்ள மணிப்பால் ஆஸ்பத்தரியில், நோயாளிகளின் உற்ற நண்பன் போல மருத்துவர்கள் மிகவும் கனிவுடன் நடந்து கொள்கிறார்கள் ] தங்கள் பதிவு மிகவும் உருக்கமாகவும், உணர்ச்சி மயமாகவும், தவித்த தவிப்பை கண்முன் நிறுத்துவதாகவும் இருந்தது.
ReplyDeleteமிக மனக்கஷ்டம் அடைந்தேன்.மனதை தேறிக்கொள்ளுங்கள்,இது தவிர என்ன சொல்லன்னு தெரியலை.
ReplyDeleteஅம்மாவை இழந்த அனைவருக்கும் இப்படி ஒரு அனுபவம் இருக்கும் .
ReplyDeleteமனது பாரமாகிறது ...காலம் தான் மாற்ற வேண்டும்
என் சோகத்தை பகிர்ந்து சுமந்து சென்ற உள்ளங்களுக்கு நன்றி(என்ன சொல்வதுனு தெரியல).என் நிலைமை யாருக்கும் வர வேண்டாம். அனைவரும் வாழும் நிமிடங்களை சந்தோஷமாக கழிக்க வேண்டும்.
ReplyDeleteஉறவுகளை வலுப்படுத்தி உயிர்களை பொருட்படுத்த வேண்டும்.
வந்த நோய்க்கு நல்ல மருத்துவரும்,மருத்துவ வசதியும் கிடைக்க வேண்டும்.
நானும் மதுரை தான் ஆச்சி...அம்மா வின் பதிவு நெகிழ்ச்சி...
ReplyDeleteநெகிழ்சியான பதிவு.அம்மான்னா சும்மாவா.அகிலத்தை உணர்த்தியவரே அவர்தானே. ஆறுதல் என்ற வார்த்தையை தவிர வேறு என்ன சொல்லமுடியும். இறைவன் நிம்மதியை தரட்டும்..
ReplyDeleteவாங்க ஆனந்தி அவர்களே,
ReplyDeleteஎனக்கு ஏகப்பட்ட சொந்தங்கள் மதுரையில அங்கங்க இருக்காங்க,எல்லாம் இருக்காங்க ........எனக்கு விபரம் தெரிந்த நாளா தொடர்பில்லாத சொந்தம் கூட அம்மாவின் துக்கம் விசாரிக்க வர,செய்தி தெரிந்தும் வேனுகிம்னே வராமல் இருந்த சில சொந்தங்களுக்கு என் அம்மா அப்படி என்ன பாவம் செய்தாங்கனு தெரியல.
ஆனால் இன்று எல்.கே அவர்களின் மூலம் எத்தனையோ பேர் எங்கெங்கிருந்தோ வந்திருப்பது கண்ட மனம் என்ன செய்யும்............
& நன்றி அன்புடன் மலிக்கா,இப்பதான் உங்க பதிவுக்கு போயிட்டு வரேன்.வரும்போது ப்லோவுஸ் தைப்பது எப்படிங்ரதை பத்திர படுத்தியிருகேன்.
அம்மாவின் இடத்தை வேறுயாராலும் நிரப்ப முடியாது என்பது நிதர்சன உண்மை...அந்த கடைசி நேரத்தில் நீங்கள்பட்ட மனத்துயரம் வேறு யாருக்கும் வரக் கூடாது என்று வேண்டிக் கொள்கிறேன். படித்து முடித்ததும் என் மனதும் சேர்ந்து அழுதது.
ReplyDeleteநரகம் எப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்திய மருத்துவமனைகளுக்கு சென்று பார்க்கலாம். இந்தியாவில் உள்ள 75 சதவிகித டாக்டர்களும் நர்சுகளும் தங்களை தாங்களே தெய்வமாக கருதி கொள்கிறார்கள். ஏதோ அவர்கள் நமக்கு பணம் ஏதும் வாங்கமல் இலவசமாக பார்ப்பது போல நினைப்பு அந்த நாய்களுக்கு.....மனிதாபிமானமில்லாத மருத்துவமனைகளையும் டாக்டர்களையும் இந்த வலைதளங்கள் மூலம் முகம் கிழிக்க வேண்டும்.நான் மதுரையில் படித்த போது என் பள்ளிக்கருகில் மகப்பேறு மருத்துவமனை ஓன்று உண்டு பிரசவ நேரத்தில் கதறும் பெண்களை சில சம்யங்களில் டாக்டர்களும் நர்சுகளும் அசிங்கமாக திட்டுவது உண்டு அவர்க்ளுக்கு மனிதாபிமானமே இல்லை என்று எண்ணுவதும் உண்டு.நல்ல வேளை நான் அமெரிக்காவில் உள்ளேன். இங்கே டாக்டரில் இருந்து கடைநிலை ஊழியர் வரை வந்து மன ஆறுதல் சொல்லுவதுண்டு.இங்கே மெடிக்கல் இன்சூரன்ஸ் இல்லை என்றால் மிகவும் கஷ்டம் ஆனால் எமர்ஜன்ஸி என்று எந்த மருத்துவமனைக்கும் சென்றால் நம்மிடம் பணம் இருக்கோ இல்லையோ அவர்கள் நோயாலிகளுக்கு மருத்துவம் கண்டிப்பாக பார்க்க வேண்டும்
ReplyDelete.நன்றி, avarkal unmaikal,
ReplyDeleteகண்ணீருடன் நன்றியை தெரிவிக்கிறேன்,அம்மா இல்லாத நாட்களை நினைத்துக் கூட பார்க்காத நான் எப்படி இத்தனை நாட்களாக வாழ்கிறேனு தெரியல,என் நிலைமை யாருக்கும் வரவே கூடாதுதான்,இயற்கையாகவே நம் கை,கால்மூச்சு எல்லாம் நல்லபடியா இருந்து ஓரல் வைத்தியங்களுக்குதான் டாக்டர்களும்,அவர்களின் மருந்துகளும் நமக்கு வேலை செய்யும்.
பல குற்ற உணர்ச்சிகளுடன் வாழ்கிறேன்,அதாவது அம்மாவை கவனிக்காமல் விட்டுவிட்டேன்,வேற மருத்துவமனைக்கு போயிருக்கலாமோ ,மருத்துவமனைக்கு போகாமல் இருந்திருந்தால் கூட என் அம்மா இன்னும் ரெண்டு நாள் இருந்திருப்பாங்க,இப்படி தினம் தினம் குமரிக்கொண்டுதான் என் மற்ற அன்றாட வேலைகளையும் பார்க்கிறேன்.பெற முடியாத ஒன்றை இழந்து விட்டேன்.
இருக்கும் வரை அன்பாதானே பாத்துகிட்டீங்க. ஆஸ்பிடல்காரர்களின் மேம்போக்கான நடவடிக்ககளால் நாம எதுவும் செய்யமுடியாமப்போகும்.
ReplyDelete