எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அன்னையால் மட்டுமே ஒரே மாதிரியான அன்பை பகிர முடியும்.நானோ என் அம்மாவுக்கு ஒரே பெண்,அம்மாவின் முழு சக்தியையும் எனக்காகவே செலவிட்டார்,மேலும் தம்பியும் தங்கையும் அம்மா என்று கூப்பிடும் அளவிற்கே வித்யாசமில்லல்லாமல் எங்களை வளர்த்தார்கள்.
அம்மாவும் சித்தியும் அத்தனை பக்குவும் பெற்றவர்கள் கிடையாது,சராசரியான கிராமத்து பெண்கள்,அனைவரும் ஒரே வீட்டில் வாழ்ந்தோம், பிள்ளைகள் ஏன்,எதற்கு,எப்படி என கேள்வி கேக்க ஆரம்பிக்கும் வரை குடும்பத்தில் சில பிரச்சனைகளும்,உரிமை போராட்டங்களுமாய் நாட்கள் நகர்ந்தது.... அப்பாவும் எதுவாக இருந்தாலும் சமாளித்து குடும்பம் நடத்தினர்.பிள்ளைகளுக்கு சுததந்திரமும்,கல்வியறிவும் தந்து வளர்த்தார்
நான் பிறந்த போது அம்மா முத்தரசி என்றே பெயர் வைக்க ஆசைப்பட்டாங்கலாம்,அனால் குல தெய்வத்தின் பெயர் படி பரமேஸ்வரி என்று பெயரிட்டாலும்,அப்போது எங்க பக்கத்தில் ஆச்சி என்ற பெயருக்கே உரித்தான வகுப்பினர்கள் பெரும்பான்மைனர் என்பதால் அவர்களின் அன்பினாலும் அம்மாவிற்கு பிடித்திருந்ததாலும் என் பெயர் ஆச்சி என்றாகியது.ஆச்சி ஆச்சி என்று அம்மா மூச்சுக்கு முன்னூறு தடவை கூப்பிடுவாங்க...அந்த குரலையும் அந்த அழைப்பில் உள்ள பாசத்தையும் மீதமுள்ள என் வாழ்நாட்களில் மறக்கவும் முடியாது,திரும்ப பெறவும் முடியாது!!!தன் குழந்தை வளருவதை,ஏற்படும் மாற்றங்களை ரசிக்காதவர் யாருமில்லை,அதே போன்றுதான் என் பெற்றோரும்.
எனக்காக அப்பா தன் சைக்களில்(அந்த காலத்து ஸ்டைலில்)முன் பகுதியில் உட்கார சின்ன மரத்தாலான சீட்,கொஞ்சம் பெரிதானவுடன் குழந்தைகள் உட்கார ஒயரால் செய்யப்பட்ட சீட்டை ஹேன்ட் பார் பகுதியில் மாட்டி அதில் உட்கார வைத்து அலைத்த்ச்செல்வராராம்,பஸ்ஸில் போகும்போது முன்னாடி உட்காந்தால் எளிதில் அடிபடலாம்,பின்னாடி உட்காந்தால் தூக்கி தூக்கி போடுமென நடு சீட்ல் உட்கார இடம் கிடைக்கும் பஸ்ஸாக அப்பா தேடுவாராம்,12 ,13 வயது வரை அப்பாவை தூக்குங்க அப்பா என்று கேட்டு அப்பாவும் என்னை தன் இடுப்பில் வைத்து வீட்டிற்குள்ளே ஒரு ரவுண்டு போயிட்டு வந்தது ஞாபகம் இருக்கிறது. எத்தனை முறை கேட்டாலும் மறுக்கமாட்டார்.
அப்பாவுடன் சைக்களில் போவது,கடற்கரையில் அப்பாவுடன் குளித்தது எல்லாமே அன்று சந்தோசமாய்,இன்று நினைவாய் உள்ளது.அப்பா எனக்கு நீச்சலும்,சைக்கள் ஓட்டவும் கற்றுக்கொடுத்தார்கள்,கற்றுக்கொள்ள நான் சிரமபட்டதைவிட அப்பா சிரமபட்டதுதான் அதிகம். சிறு வயதில் ஒரு நாள் அப்பா ஹோட்டலுக்கு அழைத்து சென்றபோது சுவர் ஓரமான டேபிளில் உட்கார்ந்தோம்,சுவர் ஓரமாய் ஜன்னலில் வேடிக்கை பார்த்துகொண்டிருந்த எனக்கு சுவற்றை முட்டும் படியாக சர்வர்கொண்டு வந்து வைத்ததும் பெரிய அதிசியமாய் இருந்தது,அன்றுதான் அத்தனை பெரிய தோசையை பார்த்தேன்(பேப்பர் ரோஸ்ட்) அதன் வடிவம்.அன்றிலிருந்து பேப்பர் ரோஸ்ட் என்று சொல்ல தெரியாமல் செவுத்த முற்ற தோசை வேணும்னு கேட்பேன்,வீட்டேல் எல்லோரும் கிண்டல் பன்வாங்க,
விளையாட்டாக அப்பாவின் சட்டைதான் எனக்கு பெரிய டிரஸ்(கண்டகால் வரை இருக்கும்)அவரின் சட்டடையை போட்டுக்கொள்வதில் அப்படி ஒரு ஆனந்தம்.அப்பா பிர்கலாத்தில் ப்ரோமோசன் அனாலும் லயன் மேனாய் உத்தியோகம் தொடங்கியவர் உயிரை பணயம் வைத்துதான் எங்களை சவ்கரியமாக வாழ வைத்தார்,அப்பாவும் அம்மாவும் ஒரு சின்ன பொருள் வாங்கினால் கூட அதை பார்ப்பவர்கள் ஒரு நொடி அதிகம் பார்க்கும்படியாக,மற்றவர்களை கவரக்ககூடியதாகத்தான் இருக்கும்!
அப்பாவும் தன் சிறு வயதிலிருந்து கஷ்டப்பட்டு தன்னையும் தன்னை சார்ந்தவரையும் முன்னேற்றியவர்தான்,அப்பாவை பற்றி இத்தனை கூறினாலும் சில கால கட்டங்களில் சில கசப்பான தருனங்கலும் வந்து போனது என்று மட்டுமே கூறவிரும்புகிறேன்,அப்பா என்று கூப்டாமல் வீம்பு பிடித்து இருந்த நாட்களும் உண்டு. அப்பாவிடம் கற்றுக்கொண்டது 'உன்னால் இயன்ற வரை முயற்சி செய்,எதையும் எளிதாக நினை,பிறரை எதிர்பார்க்கதே'
குறிப்பாக பண்டிகை நாட்களை பெற்றோருடன் கொண்டாடியதை மறக்க முடியாது,ஆடி 18 ற்கு அம்மா மற்றும் அக்கம் பக்கத்தாருடன் அருகிலுள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று பூஜித்து ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிறு கட்டிக்கொள்வதும் எண்ணிக்கையில் எனக்கு நிறைய,உனக்கு குறைவென்று சக தோழியருடன் போட்டிக்கு நின்றதை மறக்க முடியாது,எந்த பண்டிகை,விசேஷ நாட்களானாலும் அம்மா அழகாக,முறையாக சொல்லப்போனால் ஒரு பிராமிணர் வீட்டில் எப்படி செய்வாங்களோ அப்படியே செய்வாங்க,மந்திரங்கள் சொல்லத் தெரியாதது ஒன்றுதான் குறை.
விநாயக சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, தமிழ் வருட பிறப்பு,தீபாவளி,கார்த்திகை மாத தீபம் , பொங்கல், என விசேஷ நாட்கள் அனைத்தும் பெற்றோருடன் கொண்டாடியது இயற்கையான இனிமையான நாட்கள். மார்கழி மாதத்தில் அம்மா அழகான பெரிய கோலங்கள் போடுவாங்க,நாங்க கலர் கொடுப்போம்,அம்மா நிறைய கோளங்களின் கலக்சன்ஸ் வச்சுருப்பாங்க,குறிப்பாக தீபாவளி, பொங்கல்.வேறு நாட்களில் புத்தாடை அணிவதை விட தீபாவளி, பொங்கலில் அணிவதுதான் எனக்கு உலக மகிழ்ச்சி.சிறு வயதிலிருந்தே ட்ரஸ் செலக்ட் செய்ய அப்பா பிள்ளைகளையும் அழைத்துச்செல்வார்,பண்டிகை ஸ்பெசல் பலகாரம் செய்வது,வீடு சுத்தம் செய்வது, பூஜை புனஸ்காரங்களை செய்வது எல்லாம் அம்மா பொறுப்பாக பாத்துக்குவாங்க,
பிள்ளைகள் நாங்கள் நல்லா டீ.வீ பார்ப்போம்,நிலைகளுக்கு மஞ்சள் குங்குமம் இடுதல்,மிக சின்ன உதவி எதுவாயிருக்குமோ அதை செய்வோம்.தீபாவளி பொங்கலின் போது ஆடை அணிகலன் எடுப்பதில் ஏதாவது பிரச்சனை வந்தால் அப்பா அதற்கு "தீபாவளி சண்டை,பொங்கல் சண்டையின்னு பேர் வைப்பார்.
பண்டிகை தினத்தன்று வீட்டில் எல்லோரும் ஒன்றாக நின்று சாமி கும்பிடுவதையும்,அப்பவோ அம்மாவோ புது ட்ரஸில் மஞ்சள் வைத்து போட்டுக்கிட்டு வாங்கனு சொல்லும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு இணையே இல்ல,அணிந்த பிறகு அப்பா அம்மாவிடமும்,அக்கம் பக்கத்தினரிடமும் ட்ரஸ்ஸை காமித்து மகிழ்ந்ததை எந்த வினாடியும் மீட்டுத் தராது,,,
அம்மாவோ பொழுது விடிந்ததிலிருந்து இரவு தூங்கும் வரை தன்னை பற்றி நினைப்பதைவிட என்னை பற்றி நினைப்பதும் எனுடைய ஒவ்வொரு அசைவிலும் தன் பங்கு,உதவி இருக்க வேண்டுமென்பதில் அவ்வளவு கவனமாக இருப்பார். அம்மா தலை வாரி விட்டால் இரவு வரை கலையாது,நான் கல்லூரி முடித்து வேலைக்கு போகும் வரை சீப்பை பிடித்து நானாக ஒன்றும் செய்ததில்லை, சடையில் பூ தைத்து அலங்காரம் செய்வது,எனக்கு 10 வயதிருக்கும்போது சைடு காது குத்தும் பேஷன் அங்கும் இங்குமாய் துவங்கியது,அம்மாவுக்கு எனக்கும் சைடு காது குத்தி அழகு பார்க்க ஆசைப்பட்டாங்க,நானும் ஒத்துக்கொண்டதால் காதில் இன்னொரு தோடு வந்துவிட்டது,அம்மா சந்தோஷப்பட்டாலும் சிலர் நல்லாயில்லைன்னு சொன்னதால் இன்னொரு தோடு போடுவதை நிறுத்திவிட்டேன்,அம்மாவை இது பெரிதாக பாதிக்கவில்லை,எதற்கு சொல்றேனேன்றால் அம்மாவிற்கும் எனக்கான உறவு இப்படிதான்,அதாவது தன் மகளுக்கு தன்னால் என்னென்ன புதிதாக, மாடலகா செய்து அழகு பாக்க முடியுமோ,அதை செய்வதற்கு எனக்கும் விருப்பமிருந்தால் செய்வாங்க,கட்டாய படுத்தமாட்டாங்க,எழாம் வகுப்பு படிக்கும்போதே அம்மா மிக ஆசைப் பட்டு ' மூக்கு குத்திக்கோ ஆச்சி, பெரிவளாயிட்டா மூக்கு ரொம்ப வலிக்கும், பொண்ணுக்கு மூக்குத்தி மிக அவசியம்னு ஆரம்பித்து ஒரு நாள் பத்தரிடம் அழைத்து சென்று மூக்கு குத்திவிட்டதேல்லாம் பெரிதல்ல, முக்குத்தி அணிந்தவுடன் உனக்கு அழகா இருக்கு ஆச்சி, இப்பவே ஞாபகார்த்தமா போட்டோ எடுத்து வச்சுக்கலாம்னு அழச்சுட்டு போனாங்க,அந்த போட்டோவில் என் மூக்குத்தி தெரியவே இல்லை, ஆனாலும் அதை பார்த்து அவ்ளோ சந்தோஷப்பட்டாங்க {இப்போ முதன் முதலாய் எடுத்த அந்த மூக்குத்தியும், அந்த போட்டோவும் அம்மாவின் நினைவுகளும் மட்டுமே என்னிடம் உள்ளது} பிடித்த உணவு சமைப்பது, சுத்தமாக இருக்க கற்றுகொடுத்தது, இறை வழிபாடு, இப்படி எல்லாவற்றிற்கும் என் அம்மாவுக்கு இணை என் அம்மாதான். அம்மா எத்தனை நல்லது சொல்லிக் கொடுத்தாலும் அம்மாவிடமிருந்து முழுமையாக எதையும் நான் கற்றுக்கொள்ளவில்லைதான்னு சொல்லனும்,
எனினும் " ஏன் ஆச்சி இப்படி செய்ற, ஏன் என் உயிரை வாங்குற,சொல்றத கேக்கவே மாட்டியா " என்று நிஜமான கோபத்திலும், சில சமயம் செல்லமாகவும் அம்மாவின் குரல் ஒலித்ததை மறக்க முடியாது. நிஜமான, செல்லமான திட்டு, குட்டு,அடி வாங்கியதும் உண்டு. டயம் ஆனாலும் சாப்பிட்டுத்தான் போகணும்,இல்லேன்னா அம்மா முகமே வாடிவிடும்,பக்கத்துக்கு வீட்டுக்கு போனால்கூட "அம்மா போயிட்டு வர்ரேம்மானு சொல்லிட்டு போனால் அம்மா முகத்தில் அப்படியொரு சந்தோஷ ரேஹை தெரியும்.
சில பிரச்சனையினால் அம்மா என்னை கண்ணீரால் கழுவிதான் வளர்த்தாங்க,குறிப்பிட்ட வயது வரை வீட்டின் அருகில் உள்ள குளத்தில் குளிக்க சென்றதும்,எத்தனையோ முறை அம்மா தலைதேயத்து குளிப்பட்டியதும்,நான் தனியாக குளத்துக்கு செல்லும்போது பக்கத்தில் இருப்பவர்களெல்லாம் எவ்ளோ நேரம் தண்ணில ஊர்றனு திட்டும்போதுலாம் கரையேராம ' ஏய் எருமைமாடு வரியா இல்லையான்னு 'அம்மா வந்து கூப்பிட்டவுடன் போவதும் மறக்கமுடியாது.
என் உருவம் அம்மா மாதிரி கிடையாது,அப்பா மாதிரி, கலரும் கொஞ்சம் அதிகம், இதில் அம்மாவுக்கு பெருமைதான் என்றாலும்,வெளி இடங்கள் சிலவற்றில் சிலரின் கண்களுக்கு நான் அம்மாவுடன் போகும்போது 'இது உங்க பொண்ணா நம்ப முடியலனு ' கேப்பாங்க,'என் பொண்ணுதாங்க'னு அம்மா சந்தோஷமா சொல்லுவாங்க,
ஒன்பதாவது வயதில் என் அஜாக்ரதயால் விபத்துக்குள்ளானேன் பைக் மோதி கால் உடைந்தது,எனக்கு என்ன நடந்துள்ளது என்று அப்பாவின் பரிதவிப்பையும்,அம்மாவின் கதறலும் கொண்டு உணர்ந்தேன்,திருவேரும்புர்க்கு அழைத்து சென்று ட்ரீட்மென்ட் கொடுத்தாங்க,நடக்க முடியமால் படுத்த படுக்கையாய் இருந்த எனக்கு,பிறந்த போது அம்மா எனக்காக என்னவெல்லாம் சேவை செய்தார்களோ அதெல்லாம் அப்போது ஞாபகம் இல்லை,அதை நினைவில் வைத்துக்கொள்ளவே அந்த விபத்து ஏற்பட்டது போல.அம்மா முகம் சுளிக்காமல் அத்தனை காரியங்களையும் செய்தார்.
14 வயதுக்கு 20 வயதுக்கு முன் அம்மாமீதும் கால் போட்டு படுத்து தூங்கியது ஞாபகம் உள்ளது,அந்த இன்பங்களையெல்லாம் எங்கும் எதிலும் பெற முடியாது.
15 வயதிருக்கும்போது எனக்கு அம்மை வார்த்தது,அப்போ அம்மா தவிச்ச தவிப்பு விவரிக்க முடியாதது,உருகி உருகி அம்மனை பிராத்திப்பாங்க,பக்கத்தில் இருந்த தாத்தாவை அழைத்து பால்,வேப்பில்லை வைத்து அம்மன் பாடலை பாடசொல்லி பூஜித்தது நினைவுள்ளது, அப்போதிலிருந்து அம்மாவின் ஆயுள் வரை நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலுக்கு தன் ஆயுள் வரை வருஷத்திற்கு ஒரு முறை அங்கப்பிர்தச்சனம் செய்வதாக வேண்டிகிட்டு கடைசிவரை செய்தாங்க,என்னையும் அப்பாவையும் தவிர அம்மாவிற்கு மிகவும் விருப்பமானவங்க நெல்லுக்கடை மாரியம்மன்தான்,அந்த அம்மனிடம் பிராத்தனை செய்துதான் நான் பிறந்ததாகவும்,பிறந்த பிறகு அப்பாவும் அம்மாவும் கரும்பு தொட்டியில் என்னை வைத்து பிரகாரம் சுற்றி வந்ததாகவும் அம்மா சொல்வாங்க இதற்கெல்லாம் நான் என்ன ஈடு செய்ய முடியும். 21 வது வயதில் ஒரு முறை எனக்கு உடல் நிலை சரியில்லாமல் மிகவும் மோசமாகி போனது,அப்போது அம்மா கவனித்த கவனிப்புக்கும்,தவிப்புக்கும் இணையாக நான் எதுவும் அம்மாவுக்கு செய்யவில்லை.
குடும்ப பிரச்சனையினால் அம்மா சில நாட்கள் என்னை அப்பாவிடம் விட்டுவிட்டு தாத்தா வீட்டுக்கு சென்றுவிட்டார். பள்ளிக்கு சென்ற நான் வகுப்பில் அமர்ந்து அம்மாவுக்கு கடிதம் எழுதிக்கொண்டிருந்ததை பார்த்துவிட்ட என் ஆசரியர் தமிழ்செல்வி&வெண்ணிலா அவர்கள் என்னை விசாரித்து பிறகு அவர்களே தன் கைப்பட கடிதம் எழுதி அம்மாவை வர வைத்தார்கள்,வந்த பின் கவுன்சிலிங் (என்று சொல்லலாம்)கொடுத்தார்கள்,அதற்கு பின் அம்மா அந்த மாதிரி முடிவு எடுக்கவில்லை,இப்போது அந்த ஆஸ்ரியயைகள் எங்கு உள்ளார்களோ எனக்கு தெரியாது,அவர்களுக்கு என்றும் நான் நன்றி கடன் பட்டவள்.
அப்பாவை விட்டு பிரிந்து என்னையும் அழைத்துக்கொண்டு அம்மாவும் நானுமாய் தனியாக வாழ எவ்வளவோ முயற்சி செய்தார் அம்மா,அனால் அப்பா விட வில்லை,என்னநடந்தாலும் குடும்பம் பிரியக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்தார் அப்பா,அனால் கடைசி வரை அம்மாவின் மன போராட்டம் குறையவில்லை.என் மீதான அக்கறையும் குறையவில்லை.
வீட்ட்டில் குளிக்க ஆரம்பித்ததிலிருந்து என் அம்மாவுடன் கடைசியாக இருந்தது வரை வெந்நீர் வைத்து அதை டப் ல் ஊற்றிவைக்காமல் இருந்ததில்லை,தலை குளித்தால் ஆச்சி தலையில டவலை சுத்தி வை,காய விடு,சளி பிடிச்சுக்கும்னு நூறு தடவ சொல்லிடுவாங்க,என் துணிகளை கூட துவைக்கவிட மாட்டாங்க,பள்ளிக்கோ,கல்லூரிக்கோ எனக்கு முன்னாடி எழுந்து தேவையான எல்லாம் செய்து என்னை அனுப்பிவைப்பதில் ஒரு நாள் கூட அலுத்துகிட்டதே இல்ல
மேலும் நான் மாலை வீட்டுக்கு வரும் நேரத்தில் வாசற்படியிலே என்னை எதிர்பர்த்து உட்காந்துட்டுருப்பாங்க ,ஏதாவது வேலை இருந்தாலும் வாசலுக்கு வந்து, வந்து எட்டிப்பாத்துட்டு போவாங்க,ஏன் தாயே இப்படி பண்றனு கேட்டால் அம்மாவின் முகத்தில் மெல்லிய புன்னகை தெரியும்,மம்ம்மினு கூப்பிட்டால் அம்மாவுக்கு சிரிப்பு வந்திடும்.அவ்வப்போது சின்னதாய் நக்கலும் ஏதாவது கோணங்கித்தனமும் செய்து அம்மாவை சிரிக்க வைக்க முயற்ச்சி செய்வேன்,வெற்றியும் பெறுவேன். அசரிரீ போல இதை செய்யாதனு அம்மாஒரு விஷயத்துக்கு தடை விதிட்சாங்கன்னா நான் மீறி நடந்தால் அந்த செயல் திருப்திகரமாகவே இருக்காது,அம்மாவின் அனலைசிங் பவர் என் விஷியத்தில் சரியாக இருக்கும்.பத்து வயதுக்கு அப்பாவுடன் வெளியில் சென்ற நாட்களை விட அம்மாவுடன் சென்ற நாட்கள்தான் அதிகம்.ஆடம்பரமில்லாமல், தகுதியை மீறாமல் அம்மா எனக்காக தேடி தேடி அணிந்துகொள்ளும் பொருளும் தின்பொருளும் வாங்கித்தந்து நான் சாப்பிடுவதையும் ,அணிந்திருப்பத்தையும் பார்த்து சந்தோஷப்படுவாங்க, எனக்கு ஜில்லுனு சாப்பிட்டால் ஒத்துக்காது நீ என்ன வேணும்னாலும் வாங்கி சாபிடுனு சொல்லி வாங்கித்ருவாங்க,அம்மாவுடன் என் கடைசி பயணம் என்று தெரியாமல் நாகையின் அந்த பிரபலமான ரசிடாரண்டில் அம்மாவை ஐஸ் போடாமல் ஒரு பழ ஜூஸாவது குடிம்மானு கட்டாயமாக குடிக்கவைத்தேன்.என் வீட்டாருக்கு வழக்கமான ரசிடாரண்டை பார்க்கும்போதெல்லாம் ஒரு நிமிடம் மனசு கனக்கிறது
அம்மாவிற்காக பெரியளவில் ஒன்றும் செய்ய முடியாவிட்டாலும் எனக்கு மிகவும் பிடித்த,அம்மாவின் முன் அமர்ந்து பலமுறை சாப்பிட்ட,தவறாமல் அம்மா வாங்கிகொடுத்த ஐஸ் கிரிமையும்,பாதன்கீரையும் இனி சாபிடவே கூடாதுனு முடிவெடுத்துள்ளேன்,அம்மா நீ எப்போ என் கண் முன் வருவ,அம்மா உன் கைய பிடித்தும் / உம்மேல உரசிகிட்டும் நடந்து வருவேனே அதெல்லாம் மீண்டும் எனக்கு கிடைக்கவே கிடைக்காதாம்மா ... உன்ன ரொம்ப மிஸ் பண்றேம்மா !!!நாம் இவ்ளவு விரைவில் பிரிவோமென்று இருவரும் நினைக்கவில்லையே அம்....மா....
அம்மா எதையும் எதிர்பார்க்க விட்டாலும் அம்மாவிற்கான நன்றி கடன் தீர்க்கவே ஒரு ஜென்மம் போதாது,அனால் இந்த ஜென்மத்திலே அம்மாவிற்காக ஒன்றும் செய்யாத பாவியாகிவிட்டேன்,அம்மா எல்லாம் வழங்குபவராகவும்,நான் பெருபவளாகவும்
மட்டுமே வாழ்ந்துவிட்டேன்.
என் பருவ வயதும்,படிக்கும் நாட்களிலும் பல,சில இன்ப துன்பங்களுடன் நகர்ந்தது என்று மட்டுமே சொல்ல விரும்புகிறேன்,ஏமாற்றங்களுக்கும் குறைவில்லை.ஆசரியர்கள் மெட்சுமளவிற்கு படிப்பு எனலாம்,பிறகு டிப்லமொவிற்கு சென்றேன்.B .E. படிக்க ஆசைப்பட்டேன் ,அதுவும் நிறைவேறவில்லை,எனவே அப்பா கம்ப்யுடர் கோர்ஸும் படிக்க வைத்தார்கள்.படிக்கும் காலங்களில் நான்கு நல்ல தோழிகளை பெற்றேன்,எங்கள் குடும்பமும் நண்பர்களகுமளவிற்கு பழக்கமானோம்.என் குடும்பத்தில் நடைபெறும் எல்லா நல்லது கெட்டதுக்கும் முறைகள் செய்ய மட்டுமே உறவினர்கள்,மற்றபடி மன ஆறுதலுக்கும்,இன்ப துன்பங்களை உண்மையான,தூய்மையான மனதுடன் பகிர்ந்துகொள்ள,உதவ முன் வருபவர்கள் தோழிகள் மட்டுமே,இதில் அப்பாவின் நட்பு வட்டாரங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.எனக்கு பம்மி என்ற பெயரும் சொந்தங்களைவிட மேலாக பழகிய ஒரு குடும்பத்தினரே வைத்தார்கள்
நாட்கள் ஓடியது,படித்தத்தை வைத்து வேலை தேடினேன்,ஓராண்டு தேடல்களுக்கு பிறகு படிப்புக்கு சம்பந்தமில்லா வேலையானாலும் பரவால்லைன்னு முடிவு செய்தேன், படிக்க&வேலைக்கு போகும்போதுதான் மனிதர்களும்,குணங்களும் இத்தனை வகை உள்ளதென்றும்,தமிழில் கூட நாலு வார்த்தை தொடர்ந்து பேச தெரியலனும்,உலகம் ரொம்ப பெரியதுனும்,கத்துக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளதுனும் உணர்ந்து கொண்டேன்
வெளியூரில் வேலை பார்த்ததால் வாரத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வருவேன்,அம்மாவிற்கு ஒரு விதத்தில் சந்தோஷம் இருந்தாலும்,என் ஆறு நாள் பிரிவை தாங்க முடியாமல் என் அம்மா பட்ட பாடு சொல்ல வார்த்தை இல்லை,வீட்டிலிருந்து கிளம்பும்போது நானும் அம்மாவும் மாத்தி மாத்தி,வெதும்புவோம். நாளடைவில் நான் தைரியமாகிவிட்டேன்,அம்மாவிடம் எந்த மாற்றமும் இல்லை,அம்மாவுக்கு ஆறுதல்,ஆலோசனை சொல்லவும் மன உந்தல் ஏற்பட்டது.அதற்குபிறகுதான் அம்மாவும் நானும் தாய் மகள் மட்டுமில்லாமல் தோழிகளாகவும் மாறினோம்!!....
வீட்டுக்கு வந்தால் அந்த பேகை(bag) கொண்டு வந்து வைப்பதோடு சரி பிறகு சுத்தம் செய்வது தேவையானவைகளை வைப்பது ,வாங்கும் சம்பளத்துக்கு செலவில்லாமல் தேவையான எல்லாம் பேக்கிங் செயத்டுவாங்க,நான்_விஜ் சாப்பிட மறுப்பேன் அதற்காக அவ்ளோ வருத்தபடுவாங்க,அந்த வெள்ளந்தியான அன்பை எங்கு போய் தேடுவேன்???நான் 2005 ல் சென்னையில் வேலை பார்த்தேன்,அப்போ கையில் மொபைல் கிடையாது வீட்டு போனுக்கு சதத் பூத்திலிருந்துதான் பேசனும்.என்னுடன் தினமும் பேச முடியலன்னு அம்மா மிகவும் வருத்த படுவாங்க,சில மாதம் கழித்து அம்மாவை என்னுடன் பத்து நாட்கள் தங்க வைத்திருந்தேன்,என் சக ரூம்மேட்சிடம் நல்லா பழகினாங்க,சமைப்பாங்க,அம்ம்மவுடன் கிண்டி பார்க்,காந்தி மீயுசியம்,அருகில் உள்ள கோவில்களுக்கு போனதை மறக்க முடியாது.
அம்மாவிடம் எனக்கு பிடித்தவைகளுள் ஒன்று என் தோழிகள் அனைவரிடமும் எனக்கு இணையாக பழகுவாங்க,நல்லது,கெட்டதுகளுக்கு தோழிகள் வீட்டுக்கு போவது,ஏதாவது ஆலோசனைகள் சொல்வதற்கும்,பெறுவதற்கும் அம்மா தயங்க மாட்டாங்க.அம்மா எனக்கு மட்டும் தோழி அல்ல,என் தோழிகளுக்கும் தோழிதான்.
No comments:
Post a Comment