Sunday, November 28, 2010

(அ).திருமணத்திற்கு பிறகு அம்மா


சராசரி கிராமத்து பெண்ணை திருமண பந்தம் நாகை  மாவட்டத்திற்கு   அழைத்து வந்தது. தன்னுடைய   கிராமத்திலிருந்து வரும்போது என் அம்மாவின் மனது பட்ட வேதனைகளை பெண்கள் அனைவராலும் அறிய முடியும்."ராஜாமணி  வீட்டை விட்டு போவது என் தாத்தாவுக்கு ஒரு கை இல்லாதது போல " என்றாராம் ஊர் பெரியவர் ஒருவர்.
                            ஒரு மணி நேர பயணம் கூட செய்யாதவர் ஏழு மணி நேர பயணம், அதுவும் பெற்றோரின் பிரிவு,உணவு,உடை,பழக்க வழக்கங்களில் சற்றே நாகரிகம்,புது மனிதர்கள் , உறவினர்கள் ,பேசும் தமிழ்  ஸ்லங் ல் வித்யாசம்,சமையல் செய்யும்   விதம் மாறுபாடு இப்படி  எல்லாவற்றிலும்  புதுமை !
              தன்னுடைய திறமையினாலும் ஆர்வத்தினாலும்  மேல்  சொன்ன      எல்லா மாற்றங்களையும் விரைவில் எளிதில் கற்றுக்கொண்டவர். அன்பான பொறுப்பான கணவர் கிடைத்தாலும்  உறவினர்களால்  பிரைச்சனை என்று மட்டுமே  கூற விரும்புகிறேன்.
              
                      என் தாத்தா வீட்டில் கிடைத்த ஒன்றை தவிர      இங்கு எல்லாம் கிடைத்தது...அது நிம்மதி.     என்று நாகபட்டினத்தில் காலடி எடுத்து வைத்தார்களோ ஆன்றே அந்த நிம்மதி என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேட வந்துள்ளார் என்பது எனக்கு மட்டுமே புரிந்த ஒன்று . நேரம் கிடைக்கும் போதெல்லாம் என் அம்மா தன்னுடைய கடந்த கால  நிகழ்வுகளை சொல்லும்போது கொஞ்சம் தன்னம்பிக்கையும்,இரக்க உணர்வும் தான் வரும்


 .                         அம்மாவின் கல்வியறிவு குறைவு என்றாலும் தன் ஆர்வத்தினால்  தமிழில் படிக்க எழுத கற்றுக்கொண்டவர்.சிறு பிள்ளைபோல சற்று கிறுக்கலாக எழுதும் என் அம்மாவின் கையெழுத்து  எனக்கு மிக பிடித்த மறக்கக முடியாத ஒன்று.என் அம்மா திறமைசாலி மட்டும் அல்ல மிகுந்த பொறுமைசாலி ஸ்ட்ரைட்  பார்வடு, ஒரு மனதாக  எதையும் முடிவேடுக்கமட்டார்  . இதுவே என்  அம்மாவின் பலவீனம் .நல்லபடியாக இருந்தால் கூட  இப்படி இருந்திருக்கலாமோ, அப்படி   இருந்திருக்கலாமோ என குழம்புவார்,எனது  குடும்ப சூழ்நிலையும்  அதற்கு காரணந்தான். மொத்தத்தில்  தைரியசாலி அல்ல , ரொம்ப  சென்சிடிவ்.


                          அம்மா நல்ல சுவையாக சமையல் செய்வார்,கூடை பின்னுவது,தையல்,அலங்கார் பூக்கள்  செய்வது,கை வினை பொருட்கள் செய்வது அதாவது ஒரு முறை பார்த்தவுடன் கவனமாக புரிந்துகொள்வர்,ஒரு வேலை செய்தல் சுத்தமாக, விரைவில்   செய்து முடிப்பது,வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வது,மற்றவர்களிடம் அன்பான முறையில் பழகுவது,தன்னால் முடிந்த உதவிகளை செய்வது,விருந்து உபசரிப்பு,குறிப்பாக கடவுள் நம்பிக்கை  .....இன்னும் பல நல்ல முறைகளில் எல்லாமே எனக்கு என் அம்மாவிற்கு இணை என் அம்மாதான் என்று சொல்லுவேன்.

                        உறவினர்களால்   பல பிரச்சனைகளை   சந்தித்த என் அம்மாவுக்கு   திருமணமாகி முன்று வருடம் வரை   குழந்தை   இல்லாத பிரச்சனையும் கூட,பல பாட்டி வைத்தியங்களுக்கும் ,கடவுள் பிராத்தனைகளுக்கும் பிறகு 15 /01 / 1982  மாட்டுப் பொங்கல்   அன்று தன் வைற்றிலிருந்து  இந்த  உலக  மடியில்  இறக்கி வைத்தாலும்  தன்  கடைசி  மூச்சு  நினைவு  வரை என் அம்மாவுக்கு எல்லாமே நான்தான், நான்தான் என் அம்மாவின்  உலகம்.இந்த வார்த்தைகளை என்னால்  தொடர்ந்து டைப் செய்ய   முடியவில்லை,பல முறை  துக்கம்  தொண்டையை   அடைப்பதை  உணர்ந்த எனக்கு இப்போது  கையும்  கட்டி வைத்தது   போல் உள்ளது,  இன்னும்  கண்ணீரும் வற்றவில்லை என்பதையும்   உணருகிறேன்.


                   என் முகத்தை பார்த்தபின் என் அம்மாவுக்கு   எல்லாவித இன்பங்களும்   கிடைத்துவிட்ட   திருப்தி, என் மீது   அளவற்ற பாசம், பொசசிவ்னஸ்  என்றும் சொல்லலாம், கண் மூடித்தனமான பாசம், எல்லாம் என் 29  வயது   முடிவதற்குள்   கொடுத்துவிட்டு   மீதமுள்ள என் வாழ்நாட்களில்  அந்த பாசத்திற்காக  ஏங்கவும், இத்தனை ஆண்டுகள்  தாய் பாசத்தை  அந்த   ஸ்பரிச   உணர்வை   அனுபவிக்கவும்   வைத்தவர்.



                                      என் அம்மாவிற்கு நான் பிறந்ததிலிருந்தே உடல் நிலை சரி  இல்லை,அப்பாவின் பாசமிகு கவனிப்புடன் அப்படியும்  இப்படியும் மூன்று   வருட   காலங்கள்  ஓடியது.அம்மாவிற்கு அடுத்து  குழந்தை  பிறப்பில்  பிரச்சனை   வந்துவிட்டதாலும்,  சொத்துக்களை ஒரே இடத்தில்   சேமிக்கவும்   என்னை கவனிக்க  ஒருவர் தேவை  என்பதை  காரணமாகக்   கொண்டு    என் அப்பா, தத்தா, அம்மாச்சி, சித்தி {அம்மாவின் தங்கை)  விருப்பத்தில்  உறவினர்களின்  முன்னிலையில்  என்  அம்மாவின்  சம்மதத்துடன் (சம்மதிக்க வைத்து)  என் அம்மாவின் கண் முன்னரே தன் கணவரை தங்கையே  பங்கு  போட ஆரம்பித்த  நாள்  என் அப்பாவின்  இரண்டாவது  திருமணம்   சித்தியுடன் நடந்தது.
                   
                           நிகழ்காலத்து வியாதியை  குணபடுதினார்களே தவிர  எதிர்காலத்து  குழந்தை  பிரச்சனைக்கு மருத்துவ  தீர்வுக்கு பதில்  மறுமண  தீர்வே  எடுத்துள்ளார்கள்.  அன்றே அம்மா   உணர்வால் கொல்லப்பட்டார், அனால்  தன் உயிரை   எனக்காக மட்டுமே இத்தனை வருடங்கள் பல துன்பங்களிலும்    இன்பங்களிலும் எனக்காகவே  தன் கடைசி  முயற்சி  வரை  பிடித்து   வைத்திருந்தார் !!! 



                         அப்பா அரசாங்க ஊழியர், அப்பர் மிடில் கிளாஸ் குடும்ப வாழ்க்கை, எனக்கு   தங்கையும்   தம்பியும்  வந்தார்கள் (சித்தி பிள்ளைகள்)அப்பா   கஷ்டபட்டாலும் பிள்ளைகள் மூவரின்   மீதும் ஒரே மாதிரியான பாசம், துன்பங்கள் பல வந்து போனாலும் தூக்கத்தில் எழுப்பி கேட்டால் கூட எனக்கு ''ரெண்டு  பொண்ணு  ஒரு பையன்"என்று   சொல்லுமளவுக்கு   மனது   அப்பா, அம்மா, சித்தி மூவருக்கும். அதே  ஒற்றுமை   பிள்ளைகளிடமும்.
                           
                           அம்மா  தன் சுவாசத்துக்கு   இணையாக   கண்ணீரையும் விட்டுத்தான்  என்னை வளர்த்தார். சில  தாங்க முடியாத சூழ்நிலையில்  அம்மா தற்கொலை முயற்சியும் செய்துள்ளார், அப்பாதான் காப்பாற்றினார்.உன்னை தவிக்கவிட்டு போயிருப்பேனே  என்று தான் செய்த தவறால் அம்மா கதறியது  இன்னமும் என் காதில் ஒலிக்கிறது, இதையெல்லாம்  பார்த்தபோது  கண்கள்  அழுதாலும்  மனம்  வலுபெற்றது.   
                          அம்மா   என்னிடமிருந்து ஒரு  துளியளவு  கூட எதையும் எதிர்பர்க்கமட்டார், தன்னுடைய வாழ்நாட்களை   எனக்காக செலவிடுவதயும்   தன்னால்   முடிந்தவற்றை  எனக்கு   செய்வதே  அம்மாவுக்கு   திருப்தி.  அம்மாவிற்காக எதுவுமே செய்யவில்லையே என்று   வேதனைப்படுவேன், அம்மாவிடமிருந்து   பெறுபவளாகவே மட்டுமே   வாழ்ந்துள்ளேன்.
               
                                                                                                                                                                                                                                           

No comments:

Post a Comment